பிரபல பரஸ்பர நிதியில் முறைகேடா?
இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி, அண்மையில் பிரபல பரஸ்பர நிதி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியது. மும்பை மற்றும் ஐதராபாத்தில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. குவான்ட் என்ற அந்த பரஸ்பர நிதிக்கு மும்பையில் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார் குறித்து செபி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 20 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் மறைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் சோதனை நடந்தது உண்மைதான் என்று குவாண்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்றும் குவாண்ட் நிறுவனம் கூறியுள்ளது. சந்தீப் டாண்டன் என்பவரால் 2017-ல் செபியிடம் இருந்து உரிமம் பெறப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பரஸ்பர நிதிகளில் ஒன்றாகும். 2019-ல் 100 கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகித்து வந்தது. தற்போது இந்த நிறுவனம் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகளை நிர்வகிக்கிறது. 26திட்டங்கள் 54 லட்சம் ஃபோலியோக்களை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ஸ்மால் கேப் ஃபண்ட் மூலம் 20ஆயிரம் கோடி ரூபாய் வரை நிர்வகிக்கப்படுகிறது. ஃபிரண்ட் ரன்னிங் என்ற மோசடி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் செபி விசாரித்து வருகிறது.இது என்ன வகை மோசடி என்று பார்த்தால், உரிமையாளர் கணக்கில் , பெயரில் ஆர்டர்கள் பெறப்படாது, அண்மையில் ஆக்சிஸ் வங்கியின் பரஸ்பர நிதியில் மோசடியில் ஈடுபட்டதாக விரேஷ் ஜோஷி மற்றும் அவர் சார்ந்த 20 பேரை செபி அதிரடியாக நீக்கியிருந்தது. 30.55 கோடி ரூபாய் மதிப்புள்ள புகாரில் விரேஷ் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.