மாமா அர்த் விநியோகஸ்தர்கள் புலம்பல்..
அழகு சாதன பொருட்களை விற்கும் பிரதான நிறுவனங்களில் ஒன்றாக மாமா அர்த் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம் கூடுதல் இன்வென்டரிகளை விதிப்பதாக அதன் விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சேதமடைந்த, விற்காத, காலாவதியான பொருட்களை மாற்றித்தருவதில் தொய்வு இருப்பதாகவும் அந்நிறுவன பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். 50 முதல் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அப்படியே தேங்கிக்கிடப்பதாகவும், ஆன்லைனில் அதிக கவனம் செலுத்தும் நிலையில் ஆஃப்லைனில் புகார்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. கடந்த பல மாதங்களாக இந்த பிரச்சனை இருந்து வரும் நிலையில் , தங்கள் கோரிக்கைகளுக்கு ஒரு வழி பிறக்கவே இல்லை என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். பழைய பொருட்கள் மாற்றித்தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை அந்நிறுவன அதிகாரிகள் மறுத்துள்ளனர். கடந்த மார்ச் மாத நிலவரப்படி மாமா அர்த் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹோனசா நிறுவன பொருட்கள் 1லட்சத்து 88ஆயிரத்து 377 கடைகளில் கிடைக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளாகத்தான் ஆஃப்லைனில் இந்த அழகு சாதன பொருட்கள் விற்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளலாம். 111.7 கோடி ரூபாய் அளவுக்கு லாபத்தை அந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் பதிவிட்டுள்ளது. நஷ்டமாக 142.8 கோடி ரூபாய் காட்டப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக செலவுகள் 1919கோடி ரூபாயாக இருக்கிறது.