ஜூலை மாதத்தில் உயர்ந்த உற்பத்தி துறை
புதிய ஆர்டர்கள் கணிசமாக உயர்ந்ததால் ஜூலை மாதத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் எட்டு மாத உச்சத்தை எட்டியது, இதன்மூலம் S&P Global India Manufacturing Managers’ Index (PMI) முந்தைய மாதத்தில் 53.9 ஆக இருந்த குறியீடு, ஜூலையில் 56.4 ஆக உயர்ந்தது.
உலகளாவிய தலையீடுகள் இருந்தபோதிலும், பொருளாதார வளர்ச்சியின் பரந்த அடிப்படையைக் குறிக்கிறது. மேலும், இயல்பை விட அதிகமாக பருவமழை பெய்து, காரீஃப் பருவ விவசாயம் ஆண்டுக்கு 2% அதிகரித்து இருப்பதால் விவசாய உற்பத்தி வலுவாக உள்ளது.
முக்கியமாக, ஜூலை மாதத்தில் உள்ளீட்டு செலவு பணவீக்கம் 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது, விநியோகம் மேம்பட்டதால், நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு உற்பத்தி விலைகள் அதிகரிப்பு விகிதம் குறைந்துள்ளது என்று எஸ்&பி குளோபல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி ஜூன் மாதத்தில் 12.7% ஆக இருந்தது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் வளர்ச்சியும் ஜூன் மாதத்தில் இரட்டை இலக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.