மார்க் மோபியஸின் திடீர் இந்திய முதலீடு ! என்ன காரணம்?
மோபியஸ் எமர்ஜிங் மார்க்கெட்ஸ் ஃபண்ட், அதன் 45% போர்ட்போலியோவை இந்தியா மற்றும் தைவானுக்கு ஒதுக்கியுள்ளதாக மார்க் மோபியஸ் தெரிவித்துள்ளார். 81 வயதான முதுபெரும் முதலீட்டாளர் மார்க் மோபியஸ், வளர்ந்து வரும் அவருடைய சந்தை நிதியில் ஏறக்குறைய பாதியை இந்தியா மற்றும் தைவானுக்கு ஒதுக்கி சீனப் பங்குகள் சரிவைத் தடுக்க உதவினார், இது ஒட்டுமொத்த வளரும் நாடுகளின் வருமானத்தை ஈர்த்துச் சென்றுள்ளது என்று தெரிகிறது
“இந்தியா 50 வருட வளர்ச்சிப் பேரணியில் உள்ளது” என்று மோபியஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார். “10 ஆண்டுகளுக்கு முன்பு சீனா இருந்த இடத்தில் இந்தியா இருக்க வாய்ப்புள்ளது” என்றும் அவர் கூறினார், மாநிலங்கள் முழுவதும் சீரான விதிகளை ஒன்றிணைக்கும் அரசாங்க கொள்கைகள் நீண்டகால நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்” என்றும் அவர் தெரிவித்தார்
வளர்ந்துவரும் பங்குச் சந்தையில் இந்த ஆண்டு தங்கள் வளர்ந்த நாடுகளின் சகாக்களுக்கிடையே பின் தங்கி விட்டன. “வளர்ந்து வரும் சந்தைகள் மோசமாக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள், ஏனெனில் சீனா வளர்ச்சிக் குறியீட்டை தன பக்கமாக இழுத்துச் செல்கிறது, ஆனால் அவர்கள் இந்தியா போன்ற பிற நாடுகளை பார்க்க வேண்டும்,” என்று மோபியஸ் கூறுகிறார். ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இன்வெஸ்ட்மென்ஸ் இல் பணிபுரிந்த பிறகு, கேப்பிட்டல் பார்ட்னர்ஸ் எல்எல்பி நிறுவனத்தை நிறுவியவர் மோபியஸ்.
“சீன பங்குகளின் சரிவு சில வாய்ப்புகளை வழங்கியுள்ளது, அரசாங்கம் ஏகபோகங்களை தவிர்க்க முயற்சித்து, சிறப்பாக ஒழுங்குபடுத்த தொடங்கியுள்ளது” என்று மோபியஸ் கூறினார். சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை நாம் இப்போது பார்க்கிறோம், இந்த மாற்றங்களால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்” என்றும் மோபியஸ் கூறினார்.