சரிவில் முடிந்த சந்தைகள்
ஜூலை 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இந்தியப்பங்குச்சந்தைகள் 2 நாட்கள் ஏற்றத்துக்கு பிறகு சரிவில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 738 புள்ளிகள் சரிந்து 80ஆயிரத்து 604 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 269புள்ளிகள் வீழ்ந்து 24ஆயிரத்து 530 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது 727 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 2656 நிறுவன பங்குகள் சரிந்தும் வர்த்தகம் நிறைவுற்றது. 65 நிறுவன பங்குகள எந்தவித மாற்றமும் இல்லாமல் முடிந்தது. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் சிறபாக செயல்பட்டன, மற்ற அனைத்துத் துறை பங்குகளும் வீழ்ந்தன. உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் பெரிய சரிவை கண்டன. இந்த துறை பங்குகள் சுமார் 4 விழுக்காடு வரை வீழ்ந்தன. ஆற்றல் மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் தலா 2 விழுக்காடு வரை சரிவை கண்டன. Infosys, ITC, Asian Paints, LTIMindtree,Britannia Industries நிறுவன பங்குகள் லாபம் கண்டன, Tata Steel, JSW Steel, BPCL, Hindalco,ONGC ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. சென்னையில் ஜூலை 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து விற்பனையானது. 55 ஆயிரம் ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6875 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய்45 காசுகள் விலை சரிந்து 97 ரூபாய் 75 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கட்டி வெள்ளி கிலோஆயிரத்து 450ரூபாய் குறைந்து 97ஆயிரத்து 750 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்