சந்தையில் ஏறுமுகம்….
இந்திய பங்குச்சந்தைகள், ஜூன் 6 ஆம் தேதி சரிவில் இருந்து 2ஆவது நாளாக மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 692புள்ளிகள் உயர்ந்து 75,074 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 201புள்ளிகள் உயர்ந்து 22,821 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது., உலகளவில் அமெரிக்க கடன் வட்டி விகிதத்தை பெடரல் ரிசர்வ் குறைக்குமா என்ற எதிர்பார்ப்பும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் அதீத வளர்ச்சியும் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ரியல்எஸ்டேட்4.85, எண்ணெய் மற்றும் எரிவாயு, தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ஆற்றல் உள்ளிட்ட துறை பங்குகள் இரண்டரை விழுக்காடுக்கும் அதிகமாக உயர்ந்து முடிந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் 600 ரூபாய் விலை உயர்ந்து 54ஆயிரத்து 400 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6800 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை, கிராமுக்கு 1ரூபாய்80 காசுகள் உயர்ந்து 98ரூபாய் ஆக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ ஆயிரத்து 800 ரூபாய் உயர்ந்து 98 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.