உச்சம் தொட்டும் பலனில்லை..
ஜூலை 29 ஆம் தேதி திங்கட்கிழமை, இந்தியப்பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 355 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 0.01புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 836 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது. வர்த்தகத்தின்போது இந்திய பங்குச்சந்தைகள் இரண்டுமே புதிய உச்சங்களை தொட்டன. மும்பை பங்குச்சந்தையில் 81,908 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையில் 24999 புள்ளிகள் என்ற உச்சமும் தொடப்பட்டது. ஆனால் அது கடைசி வரை நீடிக்கவில்லை. Divis Labs, L&T, BPCL, Bajaj Finserv,M&M உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன. Titan Company, Bharti Airtel, Cipla, ITC,Tata Consumer Products ஆகிய நிறுவனங்கள் சரிவை கண்டன. தகவல் தொழில்நுட்பத்துறை, டெலிகாம் உள்ளிட்ட பங்குகள் 0.4%சரிந்தன. ஆட்டோமொபைல், வங்கி, ஊடகம், ஆற்றல் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் அரை முதல் இரண்டரை விழுக்காடு ஏற்றம் கண்டன. சென்னையில் ஜூலை 29 ஆம் தேதி திங்கட் கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து விற்பனையானது. ஒருசவரன் 51 ஆயிரத்து320 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6415 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி முன்தின விலையை விட 50 காசுகள் உயர்ந்து 89 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளியும் விலைகிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து 89 ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்