சந்தைகளில் சுமார் நிலவரம்
இந்திய பங்குச்சந்தைகளில் ஜூன் 19 ஆம் தேதியான புதன்கிழமை மிகப்பெரிய உச்சம் தொடப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 36புள்ளிகள் உயர்ந்து 77 ஆயிரத்து 337 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 41 புள்ளிகள் சரிந்து 23 ஆயிரத்து 516 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. எச்டிஎப்சி வங்கி பங்குகள் மிகப்பெரிய லாபம் கண்டன, Axis Bank, ICICI Bank, IndusInd Bank, Kotak Mahindra Bank பங்குகள் ஏற்றம் கண்டன, அதே நேரம் டைட்டன் நிறுவன பங்குகள் சரிவை கண்டது. Maruti Suzuki, L&T, Hindalco, Bharti Airtel நிறுவன பங்குகள் சரிவை கண்டன. உச்சம் தொட்ட பங்குகள் அதனை தக்கவைக்க தவறிவிட்டன. வங்கிகள், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளைத் தவிர்த்து மற்ற அனைத்து துறைகளும் குறிப்பாக ஆட்டோமொபைல், உலோகம், எண்ணெய், எரிவாயு, ஆற்றல் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 1 முதல் 3 விழுக்காடு வரை சரிவை கண்டன. Axis Bank, Cipla, Jindal Steel, Coromandel International, Oracle Financial, Whirlpool, GMR Airports, Torrent Pharma, Federal Bank, Cummins India, Exide Industries, UNO Minda உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சம் தொட்டன. சென்னையில் புதன்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் விலை குறைந்து 53 ஆயிரத்து 520 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் விலை குறைந்து 6690 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து 95 ரூபாய் 60 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 400 ரூபாய் கிலோவுக்கு குறைந்து 95ஆயிரத்து 600 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்