பெரிய மாற்றமின்றி முடிந்த சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகளில் மே 21ஆம் தேதி பெரியமாற்றம் ஏற்படவில்லை . மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 52 புள்ளிகள் சரிந்து 73953 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. அதே நேரம் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27 புள்ளிகள் உயர்ந்து 22,529 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. 1,411 பங்குகள் உயர்ந்தும், 2082 நிறுவன பங்குகள் சரிந்தும், 128 புள்ளிகள் மாற்றமின்றியும் முடிந்தன. Hindalco Industries, Coal India, JSW Steel, Tata Steel Adani Ports ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும், Nestle, Hero MotoCorp, ICICI Bank, TCS, Maruti Suzuki ஆகிய நிறுவனங்கள் சரிந்தும் முடிந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் 320 ரூபாய் விலை குறைந்து 54ஆயிரத்து880 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6860ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை, கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 99ரூபாயாக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை 2 ஆயிரம் ரூபாய் குறைந்து 99 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் .