சரிவுடன் முடிந்த சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள், மே30 ஆம் தேதி சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 617புள்ளிகள் சரிந்து 73,885 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 216 புள்ளிகள் குறைந்து 22,488 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது., தேசிய பங்குச்சந்தையில் ICICI Bank, Axis Bank, HDFC Bank, SBI, Kotak Mahindra Bank ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. Tata Steel, Tech Mahindra, Power Grid Corporation, Wipro,Titan Company உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை கண்டன. வங்கித்துறை பங்குகள் மட்டும் 0.5 விழுக்காடு உயர்ந்தன. மற்றபடி ஆட்டோமொபைல், உலோகம், தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் சுகாதாரத்துறை பங்குகள் 1 முதல் 2 விழுக்காடு வரை சரிவை கண்டன. Aditya Birla Fashion, BF Utilities, Coromandel International, EID Parry, Emami, Heritage Foods, Indian Bank, Jupiter Wagons, KNR Construct, Mazagon Dock, Samvardhana Motherson, Saregama India, Suprajit Engineering, UNO Minda, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் 360 ரூபாய் விலை குறைந்து 53ஆயிரத்து 840 ரூபாயாக விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் 6730ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை, கிராமுக்கு 1 ரூபாய்2 0 காசுகள் குறைந்து 101ரூபாயாக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை 1லட்சத்து ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.