இந்திய சந்தைகளில் பெரியமாற்றமில்லை..
இந்திய பங்குச்சந்தைகள்,மே 6 ஆம் தேதி லேசான மாற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் உயர்ந்து 73,895 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 33 புள்ளிகள் சரிந்து 22,442 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது., தேசிய பங்குச்சந்தையில் Kotak Mahindra Bank, Tata Consultancy Services, Hindustan Uneliver ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Titan Co Ltd,SBI, NTPCஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. தேசிய பங்குச்சந்தையில் ரியல் எஸ்டேட் பங்குகள் மட்டும் 2.76 விழுக்காடு உயர்ந்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் 3.66 %, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் 1.75% வீழ்ந்தன. 1294 நிறுவன பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன, அதே நேரம் 2627 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. 172 நிறுவன பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் வர்த்தகம் நிறைவுற்றது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் விலை உயர்ந்து 52ஆயிரத்து 880 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6610ரூபாயாக உள்ளது.வெள்ளி விலை, கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து குறைந்து 87 ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை 87 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை மறந்துவிடவேண்டாம்.