சந்தைகளில் ரத்த ஆறு..7.66 லட்சம் கோடி காலி…
இந்திய சந்தைகளில் அக்டோபர் 23ஆம் தேதி ரத்த ஆறே ஓடியது என்றுதான் சொல்ல வேண்டும், அமெரிக்க கருவூலம் ஈட்டிய விகிதம் 5%ஐ கடந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் காரணமாக உலகின் பெரும்பாலான சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்திய சந்தைகளில் முதலீட்டாளர்கள் பணம் 7.66 லட்சம் கோடி ரூபாய் இழக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 826 புள்ளிகள் சரிந்துள்ளன.வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 64,572 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 261 புள்ளிகள் சரிந்து 19,282 புள்ளிகளாக வீழ்ந்தது. இந்தியாவில் சில தனியார் வங்கிகள் முடிவுகள் மிகச்சிறப்பாக இருந்தபோதும் முழுக்க முழுக்க வெளிநாட்டு காரணிகளால் இந்திய சந்தைகள் சரிந்தன. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் இந்திய சந்தைகள் ஆட்டம் கண்டன. மகிந்திரா அண்ட் மகிந்திரா,பஜாஜ் பைனான்ஸ் தவிர்த்து மற்ற அனைத்து நிறுவன பங்குகளும் சரிவில் முடிந்தன.LTIMindtree, Adani Enterprises, Hindalco Industries, JSW Steel ஆகிய நிறுவன பங்குகள் 3 முதல் 4 விழுக்காடு வரை சரிந்தன.