சந்தைகளில் தொடரும் சரிவு!!
பிப்ரவரி 21ம் தேதியான செவ்வாய்க்கிழமை, இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது , தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி17.90புள்ளிகள் சரிந்து 17ஆயிரத்து 826 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இதேபோல் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 18புள்ளி 82 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 672 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. என்டிபிசி, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல்,பவர் கிரிட், எச்டிஎப்சி, மகேந்திரா அன்ட் மகேந்திரா , ஐசிஐசிஐ வங்கி பங்குகள், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. மாருதி, ஆக்சிஸ் வங்கி, டைட்டன் நிறுவன பங்குகள் சரிவை கண்டன. என்டிபிசி,பிரிட்டானியா ,டாடா நிறுவன பங்குகள் தேசிய பங்குச்சந்தைகளில் ஏற்றத்தை சந்தித்தன. அதானி என்டர்பிரைசர்ஸ், கோல் இந்தியா நிறுவன பங்குகள் சரிவை சந்தித்து உள்ளன. தங்கத்தின் விலையும் இன்றுபிப்ரவரி 21ம் தேதி சரிவை சந்தித்தன, ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ரூபாய் விலை குறைந்து 5 ஆயிரத்து 275 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 42 ஆயிரத்து 200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 71 ரூபாய் 70 காசுகளாக உள்ளது . கட்டி வெள்ளி விலை கிலோ 71 ஆயிரத்து 700 ரூபாயாக உள்ளது.(மேலே கூறிய விலை 3 சதவீதம் ஜிஎஸ்டி விலை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)