உயர்வில் முடிந்த சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள் நவம்பர் 16 ஆம் தேதி உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 306 புள்ளிகள் உயர்ந்து 65,982.48 புள்ளிகளாக வர்த்தகம் முடிந்தது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 89 புள்ளிகள் அதிகரித்து 19765 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள் பின்னர் ஏற்றம் கண்டன. Hero MotoCorp, Tech Mahindra, TCS, HCL Technologies,Infosys ஆகிய நிறுவன பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் லாபத்தை பதிவு செய்தன. Axis Bank, Coal India, Power Grid Corporation, Tata Consumer Products,Adani Enterprises நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 3 விழுக்காடு வரை உயர்ந்து முடிந்தன. ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 1 விழுக்காடு வரை விலை உயர்ந்து முடிந்தன.Hero Motocorp, Welspun Corp, Satin Creditcare Network, L&T Finance Holdings, Shriram Finance, Wonderla Holidays, Persistent Systems, Wockhardt, IPCA Laboratories, Tata Motors, Balkrishna Industries,Bajaj Auto உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து முடிந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய குறைந்திருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் குறைந்து 5635 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 80 ரூபாயாக இருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து முடிந்தது. ஒரு கிராம் வெள்ளி 78 ரூபாயாக இருக்கிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் செய்கூலி, சேதாரம் மற்றும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி சேர்க்கப்பட வேண்டும். செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.