மீண்டும்உச்சத்தில் முடிந்த சந்தைகள்
இந்தியப்பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51 புள்ளிகள் உயர்ந்து 80ஆயிரத்து 716 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 613 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது கோல் இந்தியா ,BPCL,hindustan uniliver, bharti airtel உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. கோடக் மகேந்திரா வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் பெரிதாக வீழ்ந்தன. ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறை பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. HUL, SBI Life Insurance, Infosys, Britannia Industries, ONGC, Godrej Properties, Oracle Financial Services, IGL, Castrol, Torrent Pharma, Lupin, Colgate Palmolive, LIC Housing Finance, Petronet LNG, Jubilant FoodWorks உள்ளிட்ட 270க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்து முடிந்தன. சென்னையில் ஜூலை 16ஆம் தேதி செவ்வாய்க் கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து விற்பனையானது. 54 ஆயிரத்து 640 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6830 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் விலை சரிந்து 99 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோ200ரூபாய் குறைந்து 99ஆயிரத்து500 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்.