சரிவில் முடிந்த சந்தைகள்.!!!
ஜூன் 15ஆம் தேதி இந்திய சந்தைகளில் சரிவு காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 306 புள்ளிகள் சரிந்து 62,921 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 72 புள்ளிகள் சரிந்து 18,683 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.1533 பங்குகள் உயர்ந்தும்,1754 பங்குகள் சரிந்தும் வர்த்தகம் நடைபெற்றது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்தடுத்து 2 முறை கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிவித்ததை அடுத்து உலகளவில் பங்குச்சந்தைகள் சரிந்தன. Hero MotoCorp, Wipro, IndusInd Bank, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட துறை பங்குகள் சரிந்தன. Apollo Hospitals, Divis Laboratories, Dr Reddy’s Laboratories, Ciplaஆகிய நிறுவன பங்குகள் உயர்ந்து முடிந்தன.தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் சரிந்து வர்த்தகம் நடைபெற்றது. ஒரு கிராம் தங்கம் 5ஆயிரத்து 505 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 44ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 1ரூபாய் குறைந்து 77 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையானது.கட்டி வெள்ளி விலை கிலோ ஆயிரம் ரூபாய் குறைந்து 77ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை இங்கே கூறப்பட்டுள்ளதுடன் 3% ஜிஎஸ்டி,மற்றும் செய்கூலி ,சேதாரம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்,ஆனால் கடைக்கு கடை செய்கூலி சேதாரம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.