பெரிய மாற்றமில்லாமல் முடிந்த சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள் அக்டோபர் 12 ஆம் தேதி பெரிய மாற்றமின்றி வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 64 புள்ளிகள் சரிந்து 66,408 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 17 புள்ளிகள் சரிந்து 19,794 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. துவக்கத்தில் சாதகமாக தொடங்கிய பங்குச்சந்தைகள்,சில மணி நேரத்திலேயே சரியத் தொடங்கின.டிசிஎஸ் நிறுவனத்தின் செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகள் கலவையான விமர்சனங்களை பெற்றதால் பங்குச்சந்தைகளில் பெரிய குழப்பம் நீடித்தது. BPCL, Coal India, Maruti Suzuki, Grasim Industries,Power Grid Corporation உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. Tech Mahindra, Apollo Hospitals, TCS, HCL Technologies, Infosys உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிய சரிவை கண்டன.தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் ஒன்றரை விழுக்காடு வரையும்,ஆட்டோமொபைல்,உலோகம்,ஆற்றல்,எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் அரை முதல் ஒரு விழுக்காடு வரை சரிந்தன. One 97 Communications, Shalby, Moil, Cupid, Balkrishna Industries, Atul Auto உள்ளிட்ட 300நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்ச அளவை எட்டின. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 304 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் விலை 5410 ரூபாயாக விற்கப்படுகிறது.இது முன்தின விளையைவிட கிராமுக்கு 38 ரூபாய் அதிகமாகும்.ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்து 280 ரூபாயாக விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 50 காசுகளாகவும், கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து 75 ஆயிரத்து 500ரூபாயாகவும் விற்பனை ஆகிறது. இந்த விலைகளுடன் 3%ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும், ஜிஎஸ்டி நிலையான 3%தான் என்றபோதும், செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.