பெரிய மாற்றமின்றி முடிந்த சந்தைகள்
ஜூலை 11 ஆம் தேதி இந்தியப்பங்குச்சந்தைகள் பெரிய மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27 புள்ளிகள் சரிந்து 79ஆயிரத்து 897புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 8 புள்ளிகள் சரிந்து 24ஆயிரத்து 316புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது பிபிசிஎல், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, ஐடிசி, டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் லாபத்தை சந்தித்தன. Tata Consumer Products, Bajaj Finance, Divis Labs, M&M, NTPC, உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவில் முடிந்தன. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 1.5 விழுக்காடு சரிந்தும், மருந்துத்துறை பங்குகள் 0.6விழுக்காடும் குறைந்தன. ஊடகம், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் 1 விழுக்காடு வரை சரிந்தன. சென்னையில் ஜூலை 11ஆம் தேதி வியாழக்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து விற்பனையானது. 54 ஆயிரத்து 280ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6785 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 1 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஆயிரம் ரூபாய் உயர்ந்து 1 லட்சம் ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்.