சரிந்து முடிந்து சந்தைகள்…
மாதத்தின் கடைசி நாளில் இந்திய சந்தைகள், மீண்ட வேகத்தில் சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 237 புள்ளிகள் சரிந்தன. 63,874 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 61 புள்ளிகள் உயர்ந்து 19ஆயிரத்து 079 புள்ளிகளாக உயர்ந்து வர்த்தகம் நிறைவுற்றது. M&M, Sun Pharma, Eicher Motors, LTIMindtree ,ONGC ஆகிய நிறுவனங்கள் பெரிய சரிவை கண்டன. SBI Life Insurance, Titan Company, HDFC Life, Kotak Mahindra Bank , Asian Paints ஆகிய நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் தவர்த்து மற்று அனைத்துத்துறை பங்குகளும் சரிவை கண்டன. KPIT Technologies, Solar Industries, Motilal Oswal, Persistent Systems, Angel One, Blue Star, Canara Bank, TVS Motor, Swan Energy, CreditAccess Grameen உள்ளிட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் பெற்றன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்த தங்கம் 5,715 ரூபாயாக விற்கப்பட்டது.ஒரு சவரன் தங்கம் 45,720 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 78 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து 78 ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் செய்கூலி,சேதாரம் மற்றும் நிலையான ஜிஎஸ்டி 3%சேர்க்கவேண்டும். இதில் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்