சரிந்து முடிந்து சந்தைகள்…
நவம்பர் மாதத்தின் 7ஆவது நாளில் இந்திய சந்தைகள், லேசாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 16புள்ளிகள் சரிந்து,64,942 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5 புள்ளிகள் சரிந்து,19,406 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. முதல் பாதியில் ஊசலாட்டத்துடன் இருந்த பங்குச்சந்தைகள், இரண்டாவது பாதியில் ஏற்றம் கண்டன. கடைசி நேரத்தில் இந்திய சந்தைகளில் அதிகம் பேர் முதலீடுகள் செய்ததால் சரிவு ஓரளவு சீரடைந்தது. Hero MotoCorp, Coal India, Bajaj Finance, JSW Steel, Divis Labs ஆகிய நிறுவனங்கள் பெரிய சரிவை கண்டனSun Pharma, BPCL, NTPC, Axis Bank,Dr Reddy’s Labsஆகிய நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன.
ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 1விழுக்காடு வரை சரிந்தன. Trent, Ratnamani Metal, Solar Industries, Varun Beverages, IOC, Tata Elxsi, Kalyan Jeweller, Prism Johnson, Suzlon Energy, Bombay Burmah, உள்ளிட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் பெற்றன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் குறைந்த தங்கம் 5,670 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 45,60 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 77 ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது.
கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 77ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் செய்கூலி,சேதாரம் மற்றும் நிலையான ஜிஎஸ்டி 3%சேர்க்கவேண்டும். இதில் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.