மார்ச் 29-ல் உயர்ந்த சந்தைகள்!!!
முதலீட்டாளர்களை நிம்மதி அடைய வைக்கும் வகையில் இந்திய சந்தைகள் மார்ச் 29ம் தேதியான புதன்கிழமை ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 346 புள்ளிகள் உயர்ந்து 57,960 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 129 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 80 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. Adani Enterprises, Adani Ports, JSW Steel, Eicher Motors, எச்சிஎல் டெக்னாலஜீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய லாபத்தை பதிவு செய்தன.UPL, Bharti Airtel, Reliance Industries, ICICI Bank உள்ளிட்ட நிறுவனங்கள் சரிந்தன. ஆட்டோமொபைல்,பொதுத்துறை வங்கிகள்,உலோகம்,ரியல் எஸ்டேட் துறை பங்குகள் ஏற்றம் கண்டன. அதே நேரம் 500க்கும் மேற்பட்ட பங்குகள் சரிந்தன.அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவன பங்குகள் 8விழுக்காடுக்கும் அதிகமான லாபத்தை பதிவு செய்தது. பங்குச்சந்தைகளை போலவே தங்கம் விலையும் பெரிய அளவில் உயர்ந்திருந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 35 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 545 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 76 ரூபாயாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரமும் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும். மேலே கூறியுள்ள விலை மார்ச் 29, 2023 தினத்துக்கானது, இது நாள்தோறும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.