புதிய உச்சம் தொட்ட சந்தைகள்
இந்திய பங்குச்சந்தைகளில் ஜூன் 26 ஆம் தேதியான புதன்கிழமை இரண்டாவது நாளாக சூப்பரான ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 620புள்ளிகள் உயர்ந்து 78 ஆயிரத்து 674 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 148புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 868 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை மற்றும் சந்தையில் வேகமாக விற்பனையாகும் பொருட்கள் அதிக வளர்ச்சியை கண்டன. Reliance Industries, UltraTech Cement, Bharti Airtel, ICICI Bank, Grasim Industries உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன. Apollo Hospitals, Bajaj Auto, M&M, Tata Steel,Hindalco Industries நிறுவன பங்குகள் சரிவை கண்டன. ஆட்டோமொபைல், உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 0.7 % முதல் 1.5 விழுக்காடு வரை சரிவைகண்டன. Reliance Industries, Bharti Airtel, ICICI Bank, Axis Bank, Grasim Industries, Shriram Finance, Vodafone Idea, Biocon, LIC Housing Finance, Shriram Finance, Indian Hotels, Honeywell Automation, Samvardhana Motherson International, L&T Finance, உள்ளிட்ட 300 நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சம் தொட்டன. சென்னையில் புதன்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160ரூபாய் விலை குறைந்தது. 53 ஆயிரத்து 280ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் விலை குறைந்து 6660 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் குறைந்து 94 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை 1000 ரூபாய் கிலோவுக்கு குறைந்து 94ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்