சரிவில் இருந்து மீண்ட சந்தைகள்…
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய சந்தைகள், கடந்த வார சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 329 புள்ளிகள் உயர்ந்து 64,112புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 19 ஆயிரத்து 140 புள்ளிகளாக உயர்ந்து வர்த்தகம் நிறைவுற்றது.
தொடக்கத்தில் சாதாரணமாக தொடங்கிய சந்தைகள் நேரம் செல்ல செல்ல சூடுபிடித்தன. கலவையான ஏற்ற இறக்கம் சந்தையில் காணப்பட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகளில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்ட நிலையில் சந்தையை சரிவில் இருந்து மீட்டன. BPCL, UltraTech Cement, ONGC, Reliance Industries,SBI Life Insurance ஆகிய நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. UPL, Tata Motors, Maruti Suzuki, Bajaj Auto,Axis Bank.ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன.ஆட்டோமொபைல் மற்றும் FMCGநிறுவன பங்குகளைத் தவிர்த்து மற்ற துறை பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. Wonderla Holidays, Trent, SML ISUZU, RateGain Travel Technologies, Punjab Chemicals, KPR Mllls, Jindal Saw, Cupid உள்ளிட்ட 150க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளன.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 35 ரூபாய் குறைந்த தங்கம் 5,735 ரூபாயாக விற்கப்பட்டது.ஒரு சவரன் தங்கம் 45,880 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 78 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 78 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் செய்கூலி,சேதாரம் மற்றும் நிலையான ஜிஎஸ்டி 3% சேர்க்க வேண்டும். இதில் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்