சரிவில் இருந்து மீண்ட சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகளில் நவம்பர் 21ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 275 புள்ளிகள் உயர்ந்து 65,930 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 89 புள்ளிகள் உயர்ந்து 19, 783 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. உலகளவில் நிலவிய சாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. SBI Life Insurance, HDFC Life, Adani Enterprises, Hindalco Industries,JSW Steel ஆகிய நிறுவன பங்குகள், நிஃப்டியில், பெரிய லாபத்தை பதிவு செய்தன. Coal India, ONGC, BPCL, Tech Mahindra and LTIMindtree, ஆகியநிறுவன பங்குகள் பெரிதாக சரிவை கண்டன. மருந்து, உலோகம்,ரியல் எஸ்டேட்துறை பங்குகள் சுமார் 1 விழுக்காடு வரை விலை உயர்ந்தன. எண்ணெய், எரிவாயுதுறை பங்குகள் அரைவிழுக்காடு விலை குறைந்தன.
New India Assurance Company , KNR Construction, KEI Industries, PCBL, Prism Johnson, Oberoi Realty, Narayana Hrudayalaya, Latent View, BASF and Gujarat Pipavav உள்ளிட்ட 350க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 20 ரூபாய் அதிகரித்து 45840 ரூபாயாக இருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் விலை உயர்ந்து 5730 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 40 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 400 ரூபாய் உயர்ந்து 79ஆயிரத்து 400 ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான சரக்கு மற்றும் சேவை வரியும், செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும், ஆனால் செய்கூலி,சேதாரம் என்பது கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.