சரிவில் இருந்து மீண்ட சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள், ஜூன் 5 ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2 ஆயிரத்து 303புள்ளிகள் உயர்ந்து 74,3829 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 736புள்ளிகள் உயர்ந்து 22,620 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது., இந்திய பங்குச்சந்தைகளில் 13 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை முதலீட்டாளர்கள் புதிதாக முதலீடு செய்தனர். தேசிய பங்குச்சந்தையில் Adani Ports, IndusInd Bank, Hindalco, Tata Steel, M&Mஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. L&T,BPCL உள்ளிட்ட நிறுவன பங்குகள் மிகப்பெரிய சரிவை கண்டன. தனியார் வங்கிகள்,ஆட்டோமொபைல்துறை,வங்கித்துறை பங்குகள் முறையே 5 மற்றும் 4 விழுக்காடு வரை உயர்ந்தன. மற்ற துறை பங்குகளும் 3 விழுக்காடு வரை உயர்ந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் விலை குறைந்து 53ஆயிரத்து 800 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6725ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை, கிராமுக்கு 2 ரூபாய்30 காசுகள் குறைந்து 96ரூபாய் 20 காசுகளாக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 2 ஆயிரத்து 300 ரூபாய் குறைந்து 96 ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.