சரிவில் இருந்து மீண்ட சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள், ஜூன்13ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 204 புள்ளிகள் உயர்ந்து 77,145 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77புள்ளிகள் உயர்ந்து 23,399 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது., தேசிய பங்குச்சந்தையில் Shriram Finance, HDFC Life, Divis Labs, M&Mஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. HUL, Britannia, Axis Bank, Eicher Motorsஉள்ளிட்ட நிறுவன பங்குகள் மிகப்பெரிய சரிவை கண்டன. ரியல் எஸ்டேட் , தகவல் தொழில்நுட்பத்துறை ஆகிய இரண்டு துறை பங்குகளும் முறையே 2 மற்றும் 1 விழுக்காடு உயர்ந்தன. ஊடகம், சந்தையில் அதிகம் விற்கப்படும் பொருட்கள் மிகமோசமாக வீழ்ந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் விலை குறைந்து 53ஆயிரத்து 280 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6660ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை, கிராமுக்கு 60காசுகள் குறைந்து 95ரூபாய் 20 காசுகளாக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 600 ரூபாய் குறைந்து 95 ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும்.