லேசாக உயர்ந்த சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள் அக்டோபர் 17 ஆம் தேதி லேசான உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 261 புள்ளிகள் உயர்ந்து 66,428 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 79 புள்ளிகள் உயர்ந்து 19,811 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. துவக்கத்தில் தடுமாறத் தொடங்கிய பங்குச்சந்தைகள்,சில மணி நேரத்திலேயே மீண்டன. Tata Motors, L&T, UPL, IndusInd Bank,TCS உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிய சரிவை கண்டன. BPCL, Power Grid Corporation, SBI Life Insurance, HDFC Life and Coal India, உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. ஆற்றல் துறை பங்குகள் 1 விழுக்காடு ஏற்றம் கண்டது. பொதுத்துறை வங்கிகள்,உலோகம்,எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் அரைவிழுக்காடு உயர்ந்தன. MRF, Jammu & Kashmir Bank, Lupin, Tata Consumer Products, Sun TV Network, Polycab India, Gail India, Balkrishna Industries, Welspun Corp உள்ளிட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத உச்ச அளவை எட்டின. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் விலை 5515ரூபாயாக விற்கப்படுகிறது.இது முன்தின விளையைவிட கிராமுக்கு 15 ரூபாய் குறைவாகும். ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 120 ரூபாயாக விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 77 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 77 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இந்த விலைகளுடன் 3%ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும், ஜிஎஸ்டி நிலையான 3%தான் என்றபோதும், செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.