உச்சத்தில் முடிந்த சந்தைகள்
இந்தியப்பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 145 புள்ளிகள் உயர்ந்து 80ஆயிரத்து 664 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 586 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது ஆட்டோமொபைல் , உலோகம் உள்ளிட்ட துறை பங்குகள் 1 முதல் 3 விழுக்காடு வரை விலை உயர்ந்து முடிந்தன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மட்டும் பின்தங்கின. நேற்றைய வர்த்த நேர முடிவில் 1945 பங்குகள் ஏற்றமும், 1939 பங்குகள் சரிவையும் கண்டன. 122 பங்குகளின் முடிவில் மாற்றமில்லை. டன்லா நிறுவன பங்குகள் 10 விழுக்காடும், டி மார்ட்டின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்க்கெட் பங்குகள் 2 விழுக்காடும் விலை உயர்ந்து முடிந்தன இதேபோல் எம் ஆர்எஃப் நிறுவன பங்குகளும் 3 விழுக்காடு உயர்ந்து முடிந்தன TCS, LTIMindtree,Infosys நிறுவன பங்குகள் பெரிதாக வீழ்ந்தன. சென்னையில் ஜூலை 15 ஆம் தேதி திங்கட்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து விற்பனையானது. 54 ஆயிரத்து 280 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6785 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் விலை சரிந்து 99 ரூபாய் 70 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோ300ரூபாய் குறைந்து 99ஆயிரத்து 700 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்