உச்சத்தில் முடிந்த சந்தைகள்
இந்தியப்பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 391 புள்ளிகள் உயர்ந்து 80ஆயிரத்து 351 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 112 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 433 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது மாருதி சுசுக்கி நிறுவன பங்குகள் 7 விழுக்காடு வரை உயர்வை கண்டன மகிந்திரா அண்ட் மகிந்திரா, டைட்டன் ஆகிய நிறுவன பங்குகள் உயர்ந்து முடிந்தன அமெரிக்க பங்குச்சந்தைகளில் நல்ல ஏற்றம் காணப்பட்டதன் எதிரொலியாகவே இந்திய சந்தைகளிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவெல் கடன்களுக்கான வட்டிவிகிதம் குறித்து அறிவிப்பு வெளியிட இருப்பதால் அமெரிக்க சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. சென்னையில் ஜூலை 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து விற்பனையானது. 54 ஆயிரத்து 160ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6770 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் விலை சரிந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோ500ரூபாய் குறைந்து 99ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்