சரிந்து முடிந்த சந்தைகள்
ஜூலை 10 ஆம் தேதி இந்தியப்பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிந்து 79ஆயிரத்து 924 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 109 புள்ளிகள் சரிந்து 24ஆயிரத்து 433 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது மகிந்திரா அண்ட் மகிந்திரா, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவில்அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவெல் கடன்களுக்கான வட்டிவிகிதம் குறித்து பாதகமான அறிவிப்பு வெளியிட்டதால் அமெரிக்க சந்தைகளில் சரிவு காணப்பட்டது சென்னையில் ஜூலை 10 ஆம் தேதி புதன் கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையானது. 54 ஆயிரத்து 80ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6760 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி விலையிலும் மாற்றமில்லாமல் 99ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்.