புதிய மைல்கல்லை எட்டிய மாருதி சுசுக்கி நிறுவனம்!!!
இந்தியாவின் பிரபலமான கார் பிராண்டுகளில் ஒன்றாகவும், பல ஆண்டுகளாக இந்தியாவுடன் நெருங்கிய நட்பிலும் உள்ள நிறுவனமாக திகழ்கிறது மாருதி சுசுக்கி நிறுவனம். இந்த நிறுவனம் அண்மையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் புதிய உச்சத்தை எட்டியது. கடந்த 1986ம் ஆண்டு முதல் வெளிநாடுகளுக்கு மாருதி சுசுக்கி நிறுவனம் கார் உள்ளிட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கதேசம்,நேபாளில் இந்த கார்கள் அதிகம் விற்கப்பட்டன. இப்போது இந்த நிறுவனம் 100 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்துள்ளது. குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 25லட்சமாவது கார் லத்தீன் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது 1987ம் ஆண்டு ஹங்கேரிக்கு முதல் முறையாக 500 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியாவில் உற்பத்தியாகும் வாகனங்கள் மிகவும் லாபரகராமாக இருப்பதாகவும், மாருதி சுசுக்கி நிறுவன அதிகாரி Hisashi Takeuchi கூறியுள்ளார். 50லட்சமாவது கார் மாருதி சுசுக்கியின் பலோனோ வகையைச் சேர்த்ததாக இருந்தது.