உயரப்போகும் மாருதி சுஸுகி கார்களின் விலை!
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பு காரணமாக செப்டம்பர் மாதம் முதல் அதன் வாகனங்களின் விலையை அதிகரிக்க உள்ளது.
“கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பால் நிறுவனம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். எனவே, கூடுதல் செலவுகளின் தாக்கத்தை வாடிக்கையாளர்களுக்கு சிறு விலை உயர்வு மூலம் வழங்குவது கட்டாயமாகிவிட்டது”, என்று மாருதி தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2021-ன் மாடல்களுக்கான விலை உயர்வு திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் செயல்படுத்தப்படும் இந்த உயர்வின் விதிகம் எவ்வளவாக இருக்கும் என்று மாருதி குறிப்பிடவில்லை.
கடந்த ஜூலையில், மாருதி பல்வேறு உள்ளீட்டு செலவுகளின் அதிகரிப்பால் ஸ்விஃப்ட் மற்றும் அதன் அனைத்து சிஎன்ஜி வாகனங்களுக்கான விலை உயர்வை அறிவித்தது. மேற்கண்ட மாடல்களில் எக்ஸ்-ஷோரூம் விலையில் (டெல்லி) ₹15,000 வரை அதிகரித்துள்ளது.
புதிய விலைகள் இன்று முதல், (ஆகஸ்ட் 30) அமலுக்கு வருகின்றன.
தற்போது மாருதி கார்களின் விலை ₹2.99 லட்சம் முதல் ₹12.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை டெல்லி) வரையிலான பல்வேறு மாடல்களை விற்பனை செய்து வருகிறது.