பேட்டரி கார்கள் உற்பத்தி.. ரூ.10,445 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசுகி..!!
Maruti Suzuki Motor Corporation பேட்டரிகளால் இயங்கும் மின்சார கார்களை உற்பத்தி செய்வதற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
வரும் 2026-ம் ஆண்டுக்குள், குஜராத்தில் மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளை உள்நாட்டில் தயாரிக்க ரூ.10,445 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் மார்ச் 19 அன்று குஜராத் அரசாங்கத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், சுசுகி மோட்டார் குஜராத் (SMG) கட்டுமானத்திற்காக ரூ.7,300 கோடி முதலீடு செய்யப் போவதாகக் கூறியது. 2025 ஆம் ஆண்டிற்குள் BEV உற்பத்திக்கான உற்பத்தித் திறனை அதிகரிக்க SMG மேலும் ரூ. 3,100 கோடி முதலீடு செய்யும்.
மேலும், மாருதி சுசுகி இந்தியா மற்றும் டொயோட்டா சுஷோ குழுமத்தின் 50:50 கூட்டு முயற்சியான மாருதி சுசுகி டொயோட்சு, 2025-க்குள் ரூ.45 கோடி முதலீட்டில் குஜராத்தில் வாகன மறுசுழற்சி ஆலையையும் நிறுவவுள்ளது. தற்போது, மாருதி சுஸுகியின் போர்ட்ஃபோலியோவில் மின்சார வாகனம் இல்லை என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.