இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கும் மாருதி சுசூகி..!
ஹரியானாவில் புதிய கார் உற்பத்தி ஆலை:
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், ஹரியானா மாநிலத்தின் சோனிபாட் என்ற இடத்தில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், மாருதி சுசூகி நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி தளமாக இது அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசூகி நிறுவன தலைவர் தகவல்:
இதுகுறித்து தெரிவித்துள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா, 2025-ம் ஆண்டுக்குள் தொடங்கப்படவுள்ள இந்த புதிய உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.
ஆலையை தொடங்குவதற்கான அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் விரைவில் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும், புதிய ஆலையின் முதல் கார் 3 ஆண்டுகளுக்கு தொடங்கப்படும் எனவும் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.