முந்தி பறக்கும் மாருதி – வாகன உற்பத்தியில் முன்னேற்றம்..!!
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், கடந்த மாதம் அதன் உற்பத்தியை அதிகரித்துள்ளதாக புதன்கிழமை தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தை அமைப்பான செபியிடம் மாருதி சுசுகி நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2022 பிப்ரவரி மாதத்தில் 1,69,692 யூனிட்களை உற்பத்தி செய்துள்ளதாகவும், இது 2021-ம் ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 1,68,180 யூனிட்களாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.
மொத்த பயணிகள் வாகன உற்பத்தி கடந்த ஆண்டு பிப்ரவரியில் 1,65,783 யூனிட்களாக இருந்த நிலையில், கடந்த மாதம் 1,65,672 யூனிட்களாக இருந்தது.
ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ மாடல் கார்களின் உற்பத்தி கடந்த மாதம் 24,285 ஆக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 28,213 யூனிட்களாக இருந்தது.
வேகன்ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டிசையர் போன்ற சிறிய கார்களின் உற்பத்தி பிப்ரவரி 2021 இல் 91,091 யூனிட்களில் இருந்து 95,968 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது என்று எம்எஸ்ஐ தெரிவித்துள்ளது.
ஜிப்சி, எர்டிகா, எஸ்-கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எக்ஸ்எல்6 வாகனங்கள் கடந்த மாதம் 33,191 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 32,501 யூனிட்களாக இருந்தது.
பிப்ரவரி 2021 இல் 12,035 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் அதன் ஈகோ வேனின் உற்பத்தியில் 9,189 யூனிட்கள் குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.