கார்களை திரும்பப் பெறும் மாருதி நிறுவனம்..
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுக்கி தனது கார்களில் இரண்டு பிரிவிகளைச் சேர்ந்த 87,599 கார்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. S presso,Eeco ரக கார்களில் ஸ்டீரிங் டை ராடில் பழுது ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்துள்ளது. ஜுலை 2021 5ஆம் தேதி யில் இருந்து 15 பிப்ரவரி 2023 வரையிலான காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்த கார்களை திரும்பப்பெறுவதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.
அரிதிலும் அரிதாக அந்த ராட் உடைய வாய்ப்பிருப்பதால் அதனை சரி செய்ய மாருதி சுசுக்கி திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுசுக்கி நிறுவன வாகனங்களின் பழுது இலவசமாக சரிசெய்யப்படும் என்றும் இது குறித்து உரிய டீலர்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவி்ப்பார்கள் என்றும் மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு விற்பனை தொடங்கப்பட்ட எஸ்பிரசோ ரக கார்கள் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 25.3 கிலோமீட்டர் மைலேஜ் தரக்கூடியது.2022-ல் மாருதி Eeco ரக வாகனங்களை அறிமுகப்படுத்தியது. இந்த வகை வாகனங்களில் 13 வகைகள் உள்ளன.கார்கோ,டூர் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய ரகங்களில் ஈகோ கார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.