பில்கேட்ஸ்,வாரனுக்கு மெக் டொனால்ட் அளித்த சலுகை..
உலகளவில் பெரும்பணக்காரர்களாக உள்ள பில்கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் இலவச உணவு அளிப்பதாக மெக் டொனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. வாரன் பஃப்பெட் மெக்டொனால்ட்டின் ஓமாஹா கிளையிலும், பில்கேட்ஸ் உலகின் எல்லா மெக்டொனால்ட் கிளைகளிலும் உணவை இலவசமாக சாப்பிடலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டே மெக்டொனால்ட் நிறுவனத்தின் கோல்ட் கார்டை வாரன் பயன்படுத்தினார். அதை ஒரு நேர்காணலிலும் அவர் வெளியிட்டார். எளிமை விரும்பியான வாரன் பஃபெட் மற்றும் சீஸ்பர்கரின் ரசிகரான பில்கேட்ஸையும் பெருமைபடுத்தும் வகையில் இந்த கார்டுகளை மெக்டொனால்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் எத்தனை கோல்ட் கார்ட்கள் வழங்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
உலகத்திலேயே அதிக பணம் வைத்திருக்கும் இருவருக்கு மெக்டொனால்ட் இலவச உணவு அளித்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.