MDH மசாலாவை வாங்கும் HUL.. HUL மதிப்பு 4% சரிவு..!!
மிகப்பெரிய MDH மசாலா நிறுவனத்தை HUL வாங்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், HUL-ன் பங்கு சரிவடைந்தது.
பாகிஸ்தான் நாட்டின் சியால்கோட் நகரத்தை சேர்ந்த Mahashian Di Hatti Private Limited நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. MDH என்று பரவலாக அறியப்பட்ட இந்நிறுவனம் பல்வேறு மசாலா பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனத்தின் நிறுவனரான தரம்பால் குலாதி 2021-ம் ஆண்டு காலமானாலும், தற்போது வரை எம்டிஎச் நிறுவனத்தின் தயாரிப்புகள் நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட பெரிய டீலர்களிலும், ஆயிரக்கணக்கான சில்லறை விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு நாளைக்கு 30 டன் அளவுக்கு 60-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் எம்டிச், கடந்த நிதியாண்டில், 1,191 கோடி ரூபாய் வருமானத்துடன், 507 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபமும் பெற்றுள்ளது. எம்டிஎச் நிறுவனத்துக்கு சொந்தமாக பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் சொத்துகளும் இருக்கின்றன.
இந்நிலையில், எம்டிஎச் நிறுவனத்தின் லாப உச்சவரம்பை கணக்கிட்ட, Hindustan Uniliver Limited MDH நிறுவனத்தை வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Surf, Rin, Lifebuoy, Closeup, Pepsodent, Brooke Bond Bru, Horlicks, Knorr, Kissan இவ்வாறு பல்வேறு அன்றாட வீட்டு உபயோகப் பொருட்களை தயாரித்து வரும் வெற்றிகரமான FMCG-நிறுவனமாக Hindustan Uniliver Limited உள்ளது. இருந்தாலும். 10 ஆயிரம் கோடி முதல் 15 ஆயிரம் கோடி வரை கொடுத்து எம்டிஎச் நிறுவனத்தை எச்யுஎல் நிறுவனம் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த செய்திகளை எம்டிஎச் நிறுவனம் மறுத்துள்ளது. இவ்வாறு வரும் செய்திகள் புனையப்பட்டவை, ஆதாரமற்றவை, தவறானவை என எம்டிஎச் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியம் மிக்க எம்டிஎச் நிறுவனத்தை நாங்கள் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தில் கொண்டு செல்ல இருக்கிறோம். எனவே எம்டிஎச் நிறுவனத்தை எச்யுஎல் வாங்க உள்ளதாக வரும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எம்டிஎச் நிறுவனத்தை எச்யுஎல் வாங்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், மார்ச்ச 23-ம் தேதி எச்யுல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.