இந்தியாவுக்கு திரும்பாதது ஏன் மெஹுல் சோக்சி விளக்கம்..
பிரபல வைர வியாபாரி மெஹூல் சோக்சி , அண்மையில் அதிகளவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்களை பெற்றுவிட்டு இந்தியாவை விட்டே ஓட்டம் பிடித்தவராக உள்ளார். தம்மால் கட்டுப்படுத்த முடியாத சில காரணங்களால் இந்தியாவுக்கு வர முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார். தனது பாஸ்போர்ட்டை இந்திய அதிகாரிகள் முடக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
பண மோசடி தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள மெஹுல் தரப்பு, அமலாக்கத்துறை தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார். பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டவராக தம்மை கருத இயலாது என்றும் மனுதாக்கல்செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை அளித்த சம்மனுக்கு ஆஜரானதாகவும், இந்திய அதிகாரிகள் வாயிலாக தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களால் தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உள்ளதாகவும் சோக்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டை முடக்கி விட்டு, மெகுலை விசராணைக்கு அழைத்தால் எப்படி வருவது என்றும், தாம் பொருளாதார குற்றம் இழைத்தவர் இல்லை என்றும் மெகுல் தரப்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் வழக்கப விசாரணையை வரும் ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,400 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு தலைமறைவாகிவிட்டதாக தேடப்பட்டு வருகிறார்.