இந்தியாவில் எம்ஜியின் புதிய ஆலை..
சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது 2ஆவது கார் உற்பத்தி ஆலையை தொடங்க இருக்கிறது.எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் கவ்ரவ் குப்தா அண்மையில் செய்தியாளர்களுக்கு புதிய தரவுகளை தெரிவித்தார். அதன்படி புதிய ஆலை அடுத்த 2,3 ஆண்டுகளில் இந்தியாவில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு குஜராத் மாநிலம் ஹலோல் நகரில் ஆலை உள்ளது.இந்த ஆலையில் ஆண்டுக்கு 1லட்சத்து 20 ஆயிரம் கார்கள் தயாரிக்க இயலும். இந்நிலையில் இரண்டாவதாக அமைய இருக்கும் ஆலையின் இடம் குறித்து மேலும் அதிக தகவல்கள் வெளியாகவில்லை. எம்ஜி மோட்டார் நிறுவனம் 2019ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. மாதந்தோறும் 5,000 கார்களை அந்த நிறுவனம் விற்று வருகிறது. 5 மாடல்களில் கார்கள் விற்கப்பட்டு வருகிறது. விற்கப்படும் 5-ல் இரண்டு மாடல்கள் மின்சார கார்களாகும். 25 முதல் 30 விழுக்காடு கார்கள் மின்சார கார்களே இந்தியாவில் இந்நிறுவன கார்கள் விற்கப்படுகின்றன.இந்த கார்களுக்கான பேட்டரிகள் சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.தற்போது குஜராத்தில் உள்ள ஆலையின் அருகிலேயே பேட்டரி அசம்பிளி ஆலையையும் எம்ஜி நிறுவனம் அமைக்க இருக்கிறது.ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 20%வரை எம்ஜி நிறுவன விற்பனை அதிகரித்துள்ளது.இந்த கார்களுக்கு பேட்டரிகள் சார்ஜ் ஏற்றும் வகையில் ஜியோ-பிபி நிறுவனங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இந்நிறுவனம் 4,000கோடி ரூபாய் முதலீடு செய்தது.இந்தியாவில் தயாராகும் கார்கள் தற்போது நேபாளத்துக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்தியாவில் எம்ஜி நிறுவனத்துக்கு 350டீலர்கள் உள்ளனர்.இதனை இந்தாண்டு இறுதிக்குள் 400ஆக உயர்த்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.