மொபிகுவிக் 100% வருவாய் வளர்ச்சியுடன் முடிவடையும் என கணிப்பு !
ஐபிஓ-க்கு உட்பட்ட ஃபின்டெக் நிறுவனமான மொபிகுவிக் நடப்பு நிதியாண்டில் 100 சதவீத வருவாய் வளர்ச்சியுடன் முடிவடையும் என்று எதிர்பார்ப்பதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மொபிகுவிக் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான உபாசனா, 2021 –ம் நிதியாண்டில் நஷ்டம் 111.3 கோடியாகவும், 302.25 கோடி வருவாயாகவும் குறைந்துள்ள மொபிகுவிக், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் வருவாயை இரட்டிப்பாக்கும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
பிஎன்பிஎல் பிரிவின் மொத்த விற்பனை மதிப்பு 38.22 சதவீதம் குறைந்து 2020-21-ல் ரூ.4,85.49ல் இருந்து ரூ.299.94 கோடியாக குறைந்துள்ளது. இந்த வணிகம் இப்போது கோவிட்-க்கு முந்தைய நிலைகளை எட்டியுள்ளது என்றும், நடப்பு நிதியாண்டில் இந்த நிறுவனம் நல்ல செயல்திறனைப் பெற்றுள்ளது என்றும் டக்கு கூறினார்.
“நாங்கள் கடந்த 12 ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம். 700 கோடி செலவழித்து 10 கோடி பயனாளர்களை எட்டிய எந்த இணைய நிறுவனத்தையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கடின உழைப்புக்கு பிறகு இந்த நிலையை எட்டியுள்ளோம்” என்று டக்கு கூறினார்.
ஐபிஓவுக்காக சந்தை நிலையானதாக இருக்கும் வரை நிறுவனம் காத்திருக்கும் என்றும் அதுவரை மூலதன செயல்திறன், நிறுவனம் மற்றும் மொபிகுவிக்கின் பிற தனித்துவமான விற்பனை முன்மொழிவுகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் எனவும் டக்கு தெரிவித்தார்.