நம்பர் 1 இடத்தைக் கைப்பற்ற ரியல்மி தீவிரம் !
மொபைல் சாதன தயாரிப்பாளரான ரியல்மி, சந்தையில் சாம்சங் மற்றும் சியோமியை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது, மேலும் 2022 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் மொபைல் சாதனத் துறையில் முதலிடத்தில் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவிற்காக மாதவ் ஷெத் மற்றும் ஸ்கை லி ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட ரியல்மி பிராண்ட், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் துறையில் அடுத்த இரண்டு வருடங்களில் அதன் மொபைல் சாதனங்கள் மற்றும் தொலைக்காட்சி, மடிக்கணினிகள், அணியக்கூடிய பொருட்கள் துறையில் இந்தியாவின் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இருக்க இலக்கு வைத்துள்ளது.
ரியல்மி தனது உலகளாவிய சந்தை ஏற்றுமதியின் அடிப்படையில், ரஷ்யாவின் முதல் மூன்று ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாகும். போலந்து, செக் குடியரசு, கிரீஸ், ஸ்லோவேனியா மற்றும் பெலாரஸ் போன்ற சந்தைகளில், முதல் ஐந்து இடங்களில் ஒன்றாகும். நிறுவனம் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஃபோன்களையும் நாட்டிற்குள்ளேயே அசெம்பிள் செய்து, அதன் ஃபோன்களின் 70 சதவிகித உள்ளூர்மயமாக்கலை எட்டியுள்ளதாகக் கூறுகிறது.
உலகளாவிய சந்தையைப் பொறுத்தவரை, சில இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன, நிறுவனம் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அசெம்பிளி ஆலைகளை நம்பியுள்ளது. இந்தியாவில் ரியல்மி போன்களின் சராசரி விற்பனை விலை 11,000 ரூபாய்க்கு மேல் தான். இருப்பினும், இப்போது சாம்சங் மற்றும் ஒன் ப்ளஸ் போன்ற ஃபோன்களை எடுத்துக்கொண்டால்ரூ.50,000-க்கும் அதிகமான பிரிவில் சாதனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது 30,000 விற்பனை நிலையங்கள் உள்ள நிலையில், அடுத்த ஆண்டு 55,000 விற்பனை நிலையங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. அதே காலக்கட்டத்தில் அதன் அனுபவ மையங்களை 1,000க்கு மேல் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது, இது தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.