பணம் அத்தனை முக்கியமானது இல்லையாம்..
இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர்கள் பட்டியலில் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவியும்,இன்போசிஸ் நிறுவன நிர்வாகிகளில் ஒருவருமான சுதாமூர்த்தி அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில்பேசினார். அதில் தன்னைப்பொறுத்தவரை பணம் அத்தனை முக்கியம் இல்லை என்று கூறியுள்ளார்.ஆனால் ஒரு தொழில்முனைவோராக இருப்பது மிகமுக்கியம் என்றார். எத்தனை பேருக்கு வேலை உருவாக்கினோம், எப்படி செல்வங்களை நிர்வகிக்கிறோம், மக்களின் வாழ்வாதாரத்தை எப்படி மேம்படுத்தலாம் என்பதும், ஏழை மக்களை வறுமையில் இருந்து மேலே கொண்டு வருவதுதான் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கூகுள் பே போன்ற சில எளிய செயலிகள் சாதாரண மனிதர்களுக்கு பெரிதும் உதவுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். கூகுள் நிறுவனத்தில் உள்ள வானிலை முன்கணிப்பு மற்றும் மேப்ஸ் ஆகியவை மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது என்றும் சுதா பெருமிதம் தெரிவித்துள்ளார்.வாட்ஸ்ஆப் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஒரு தொழில் முனைபவரின் மனைவி என்பவர் , மனைவி, செகரட்ரி, நிதி மேலாண்மை அதிகாரி,என பல வகைகளில் உதவ வேண்டும் என்றும் இதில் ஏதேனும் ஒரு இடத்தில் சறுக்கினாலும் அது தொழில் தொடங்குபவரை பெரிதும் பாதிக்கும் என்றார்.இதே நிகழ்ச்சியில் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக எப்படி முன்னேறினேன் என்றும் அதற்கு தனது மனைவி எப்படி உதவினார் என்றும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.