காசு பணம் துட்டு மனி மனி..
வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் குவியத் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இந்த வாரம் தொடர்ந்து உயர்வுடன் தொடங்கியதால் பங்குகளை வாங்குவதிலேயே முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. நிதியாண்டின் முதல் காலாண்டில் பங்குச்சந்தைகள் கிட்டத்தட்ட 10%ஏற்றம் கண்டுள்ளன. அதிலும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஜூலை மாதத்தில் மட்டும் 2.38%ஏற்றம் கண்டுள்ளது.இது அதிக வளர்ச்சி என்று நிபுணர்கள் எச்சரித்தும் வருகின்றனர். இந்த வளர்ச்சிக்கு காரணம் உலகளவில் பங்குச்சந்தைகள் மற்றும் பொருளாதார அடிப்படை கட்டமைப்புகள் வலுவாக உள்ளன. இதன் பிரதிபலிப்பாகவே இந்திய சந்தைகளில் ஏற்றம் காணப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் பணவீக்கம் 3%க்கும் குறைவாக சரியும் என்று யாரும் எதிர்பாராத வகையில் பணவீக்கம் சரிந்துவிட்டது.இதனால் வட்டி விகிதம் உயர்த்தும் முயற்சியை அமெரிக்க பெடரல் ரிசர்வ் கைவிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டாலர் இன்டக்ஸ் என்ற குறியீடு 103.57-ல் இருந்து 99.9ஆக குறைந்துள்ளது. இது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டுக்கு மிகமுக்கிய சாதகமாக அமைந்துள்ளது. இந்தியாவில் ஜிஎஸ்டி வசூலிப்பு ஜூன் மாதத்தில் 1.60 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது. ஜூன்,ஜூலை மாதங்களில் இந்தியாவில் பருவமழை பொழிவு அதிகரிப்பு ஆகிய காரணிகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற மிக முக்கிய காரணிகளாகும். ஆற்றல் , நிதி, உலோகம் உள்ளிட்ட துறைகள் இந்திய சந்தைகளில் ஏற்றம் கண்டிருப்பதும் இந்தியசந்தைகளை நோக்கி முதலீட்டாளர்களை ஈர்க்கும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது.ஜூன் மாதத்தில் வாகன விற்பனை குறித்து தரவுகளின் அடிப்படையில்தான்ரிசர்வ் வங்கி தனது அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க இருக்கிறது. இதே நிலை வரும் நாட்களில் தொடர்ந்தால் இந்திய சந்தைகள் புதிய உச்சங்களை தொடும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.விலை மதிப்பு குறைப்பு என்பது நேரிட்டாலும் இந்திய சந்தைகள் வலுவாகவே இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.