நிலையைமை கண்காணிக்கிறோம்…டிசிஎஸ்..
இஸ்ரேலுக்கும்-ஹமாஸ் படையினருக்கும் இடையே உக்கிரமான போர் நடந்து வரும் சூழலில் அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்குள்ள பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன. குறிப்பிட்ட போர் நடக்கும் பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் டிசிஎஸ் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக டிசிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பி்ட்டுள்ளது. எத்தனை பணியாளர்கள் போரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை டிசிஎஸ் அளிக்கவில்லை.. இஸ்ரேலில் மட்டும் இந்தியர்கள் 15-18000 பேர் இருக்கின்றனர்.. இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில்தான் இஸ்ரேலில் நடக்கும் தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக ஆயிரத்து 100 பேர் இஸ்ரேலில் பணியமர்த்தப்பட்டனர்.2005 முதல் இஸ்ரேலில் டிசிஎஸ் இயங்கி வருகிறது. இதற்கு முன்னதாக அதானி நிறுவனம் தனது பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், துறைமுகமபெரிதாக பாதிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. காசாவில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக ஏராளமான வீடுகள் தரைமட்டமாகின. இஸ்ரேலைச் சேர்ந்த 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வணிக அமைப்புகள் கட்டடக் குவியல்களாக மாறிவிட்டன. 3 லட்சம் ராணுவ வீரர்களை தாக்குதல் நடத்திய காஸா பகுதிக்கு சென்று பயங்கரவாத குழுக்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.