நுகர்வோர் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!
இந்தியாவின் நுகர்வோர் பொருட்கள் (FMCG) தொழில் 2022 ஆம் ஆண்டில் 8 முதல் 10 சதவீதம்வரை வளர்ச்சியடையக்கூடும் என்றும் பண்டிகைக் காலம் மற்றும் இரண்டாம் பாதியில் நல்ல பருவமழையின் உதவியால் இந்த வளர்ச்சி இருக்கும் என நீல்சென் ஐக்யூ நிறுவனம் கூறியது.
பணவீக்கம் மற்றும் விநியோக சவால்கள் தொடர்ந்து நீடிப்பதாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு, விலை நிர்ணயம் வளர்ச்சியின் பெரும் பகுதியாக இருக்கும் என்றும் நீல்சன்ஐக்யூவின் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சதீஷ் பிள்ளை கூறினார்.
நகர்ப்புற சந்தைகள் முந்தைய ஆண்டை விட 0.6% நேர்மறையான அளவு வளர்ச்சியுடன் புத்துயிர் பெற்றன. கிராமப்புற சந்தைகளுடன் ஒப்பிடும்போது 2.4% குறைந்துள்ளது என்று ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக பணவீக்கம் காரணமாக வாடிக்கையாளர்கள் சிறிய பேக்குகளுக்கு மாறுவது அதிகரிக்கிறது. இது கடைக்காரர்களை மாதாந்திர செலவினங்களைக் குறைக்க தூண்டுகிறது என்றும் நீல்சென்ஐக்யூ தெரிவித்தது.