அதிகளவில் வேலையை மாற்றும் இளைஞர்கள்..
அடுத்த 12 மாதங்களில் ஏராளமான இளைஞர்கள் தங்கள் வேலைகளை வேறு திசையில் மாற்ற திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிடபிள்யூசி என்ற நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வுக்கு 2024-ன் நம்பிக்கையும், பயமும் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் 28 விழுக்காடு பணியாளர்கள் கண்டிப்பாக வேலையை மாற்றியே ஆகவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 2023-ல் இந்த எண்ணிக்கை 26 விழுக்காடாக இருந்தது. 2022-ல் இந்த எண்ணிக்கை 19%ஆக இருந்தது. 50 நாடுகளில் 56ஆயிரம் பேரிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வேலையில் திருப்பிதான் முக்கியம் என 60 %மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வில் வேலை பளு அதிகரித்துள்ளதாக 45 விழுக்காடு மக்களும், ஒரே நேரத்தில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்வதாக 53 %பேரும் கூறியுள்ளனர். ஒரு துறையில் உள்ள தலைவர் அவரின் குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்படி இல்லையெனில் வணிகம் சொதப்பும் என்றும் தெரிவித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு நுட்பம் அடிப்படையிலேயே பணி சூழலை மாற்றும் என்றும் 80 விழுக்காடு பேர் அடுத்த 12 மாதங்களில் ஆக்கபூர்வமாக பணிகள் நடக்க இருப்பதாக கூறியுள்ளனர், செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை ஓராண்டில் ஒருமுறையாவது பயன்படுத்தியுள்ளதாக 61 விழுக்காடு மக்கள் தெரிவித்துள்ளனர். 12%பேர் தினசரி பயன்படுத்துவதாகவும் வாரத்தில் பல முறை பயன்படுத்துவதாக 16%மக்களும் தெரிவித்துள்ளனர்.