பிரீமியம் பைக்குகளில் அதிக கவனம்…
இந்தியாவில் ராயல் என்ஃபீல்ட் ரக புல்லட்டுகளை எய்ஷர் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சித்தார்த்தா லால் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியலால், இந்தியாவில் நடுத்தர எடை கொண்ட் பைக்குகளின் போட்டி அதிகரித்துள்ளது என்றார். குறிப்பாக ஹீரோ மோட்டார்கார்ப், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டோர் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் தங்கள் பிரீமியம் ரக பைக்குகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். 250-750 சிசி அளவு கொண்டுள்ள பைக் ரகங்களில் மேலே சொன்ன நிறுவனங்கள் மத்தியில் நல்ல போட்டி நிலவுகிறது என்றார். இத்தனை போட்டிக்கு மத்தியிலும் ராயல் என்ஃபீல்ட் ரக வண்டிகளுக்கு அதிக முக்கியத்துவத்தை வாடிக்கையாளர்கள் அளிக்கின்றனர் என்றார். ஹிமாலியன், மெடியோர், புல்லட், கிளாசிக், இண்டர் செப்டார் உள்ளிட்ட ரக பைக்குகளை விற்றுவருகிறது. இவற்றில் 250-750 சிசி அளவு கொண்டுள்ள பைக் ரகங்களின் பங்களிப்பு 85 விழுக்காடு என்று தெரிவித்துள்ளார். டிரியம்ப்,ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ், ஹார்லே டேவிட்சன் 440எக்ஸ் உள்ளிட்ட வாகனங்களும், ஹீரோ மேவ்ரிக் மற்றும் பல்சர் 400 உள்ளிட்ட பைக்குகளுக்கும் தங்கள் நிறுவனத்துக்கும்தான் போட்டி நிலவுவதாக லால் கூறியுள்ளார். 2010-ல் 250 சிசிக்கும் அதிகமான திறனுள்ள பைக்குகள் விற்பனை வெறும் 1 விழுக்காடாக இருந்ததாகவும், தற்போது இது 10 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் இந்த அளவு 20 விழுக்காடாக உயர வேண்டும் என்றும் தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 9,12,732 யூனிட்டுகளை விற்றுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் 8,34,895 யூனிட்களை அந்நிறுவனம் விற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் 1,200 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. வளர்ச்சியில் எந்த சமரசமும் இல்லை என்று குறிப்பிட்ட லால், சந்தையில் எத்தனை விழுக்காடு வளர்ச்சி இருக்கிறதோ அதைவிடவும் இருமடங்கு வேகத்தை இலக்காக நிர்ணயித்திருப்பதாகவும் லால் குறிப்பிட்டார்.