ஓடிபோன ஓடிடி சந்தாதாரர்கள்.. Netflix-ன் பங்கு மதிப்பு சரிவு..!!
கடந்த 3 மாதங்களுக்குள் OTT Streaming தளமான Netflix லட்சக்கணக்கான சந்தாதாரர்களை இழந்துள்ளதால் அதன் பங்குச்சந்தை மதிப்பு சரிந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த OTT Streaming தளமான Netflix தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. மேலும், ஆவணப்படங்க்ள, வெப் சீரிஸ்களையும் Streaming செய்து வருகிறது.
1997-ம் ஆண்டு முதல் OTT Streaming செய்து வரும் Netflix தளம் சந்தாதாரர்களை இழந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2 லட்சம் சந்தாதாரர்கள் Netflix OTT Streaming தளத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
நடப்பு ஆண்டினுடைய முதல் காலாண்டின் இறுதியில் 221.6 மில்லியன் சந்தாதாரர்கள் இருந்ததாகவும், இது கடந்த காலாண்டை விட சற்று குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், கடந்த 3 மாதங்களில் சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியதாகவும், இதேகாலத்தில், முந்தைய ஆண்டுக்கான காலாண்டில் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாய் பெற்றதாகவும் நெட்ப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக, ரஷ்ய நாட்டில் தங்களுடைய சேவைகளை நிறுத்தியதால் அதிக அளவில் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக Netflix கூறியுள்ளது. ஏப்ரல் – ஜுன் மாத காலாண்டில், 2 மில்லியன் சந்தாதாரர்களை Netflix OTT Streaming இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2 லட்சம் சந்தாதார்களை இழந்ததால் Netflix-ன் சந்தை மதிப்பு 26 சதவீதம் வரை சரிந்துள்ள நிலையில், மேலும் சரிய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.