அதிக பாதிப்பு உண்டாகும் பங்குகள்..
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்று லாபத்தை பதிவு செய்யும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது நிதி மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் தான். நிதித்துறை நிறுவனங்களின் முதலீடுகள்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் மேற்கொண்டு வந்தனர். ஆற்றல் மற்றும் கட்டுமானத்துறை பங்குகளும் நல்ல லாபம் கண்டு வந்தன. இந்தியாவில் இருந்து மட்டும் 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செப்டம்பர் மாதம் முதல் நிதி வெளியேறி இருக்கிறது. சந்தையில் அதிக வெயிட்டேஜ் தரப்பட்ட வங்கித்துறை பங்குகளை மக்கள் அதிகம் விற்றுள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் விற்றுள்ளனர்.வங்கித்துறை பங்குகள் மீள்வதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதால்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் பங்குகளை விற்று வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கட்டுமானத்துறை பங்குகள் சிக்கலை சந்தித்து வருவதற்கு முக்கிய காரணம் அடுத்தாண்டு பொதுத்தேர்தல் இந்தியாவில் நடைபெற உள்ளது.ஆற்றல்துறை பங்குகளில் பெரிய லாபம் இல்லை என்பதால் அதனையும் முதலீட்டாளர்கள் தள்ளிவிடத்தான் பார்ப்பார்கள் என்கிறார்கள் நிபுணர்கள். தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கும் பொருட்கள் மீதான முதலீடுகளும் முதல் 2 வாரங்களில் பெரிதாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.அதிகப்படியான மதிப்பீடுகள் மூலமாக பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது.